``இசைக்கும் நடனத்துக்கும் இருக்கும் மதிப்பு ஓவியத்துக்கு இல்லை’’- ரமணன் தங்கதுரை

By காமதேனு

ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு பெரிய கார் கம்பெனிகளுக்கு வேலை தேடிப் போகாமல் தூரிகையை ஏந்தியிருக்கிறார் 22 வயது இளைஞர் ரமணன் தங்கதுரை. நவீன ஓவியத்தின் பல வகைகளை ஒரு கை பார்க்கிறார். இவரது ஓவியங்கள், சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் சோழமண்டலம் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜில் ஜூன் 9 முதல் 12-ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அது பற்றி அவருடன் பேசியதிலிருந்து...

ஓவியத்தின் மீது எப்படி ஆர்வம் வந்தது?

சிறு வயதிலிருந்தே எனக்கு ஓவியங்கள் வரைவதில் ஆர்வம். எதாவது வரைந்துகொண்டேதான் இருப்பேன். யாரிடமும் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய கற்பனையில் தோன்றுபவைகளை வரைந்துவருகிறேன். பெற்றோரின் வற்புறுத்தலால் இன்ஜினீயரிங் படித்தேன். அந்த நான்கு வருடங்களில் ஓவியத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதன் பிறகு மீண்டும் ஓவியத்தில் ஆழ்ந்துவிட்டேன். இதுவரை 250 ஓவியங்கள் வரைந்திருக்கிறேன்.

ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. உங்களது தனித்துவம் என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE