ஓவியம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைகளையெல்லாம் உடைத்தவர் பாப்லோ பிகாசோ. இந்த மாபெரும் கலைஞன் மக்கள் உண்ணும் உணவுக்கும் அவர்களின் கலாச்சாரத்துக்குமிடையே உள்ள தொடர்புகளையும் தன்னுடைய ஓவியங்களில் பதிவு செய்துள்ளார். அத்தகைய ஓவியங்கள் பார்சிலோனாவில் உள்ள அவரது அருங்காட்சியகத்தில் முதன்முறையாகக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில் மொத்தம் 180 ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சமையல் மற்றும் உணவு சார்ந்தவை. ‘பிகாசோவின் கிச்சன்’ என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ஓவியங்களின் வழியாகத் தன்னுடைய இன்னொரு பார்வையை உலகுக்கு உணர்த்துகிறார் பிகாசோ. இந்தக் கண்காட்சி செப்டம்பர் 30 வரை நடக்கிறது.