“படைப்பாளிக்கு அங்கீகாரமே ஊக்க மருந்து”- அரிகரசுதன்

By காமதேனு

இயக்குநர் பாலுமகேந்திராவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் ஸ்டுடியோ அமைப்பு குறும்படங்கள் திரையிடல் மற்றும் விருது வழங்கும் விழாவை சென்னையில் நடத்தியது. இதற்காக 80 குறும்படங்களிலிருந்து 10 படங்கள் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடப்பட்டன. அதைத் தொடர்ந்து பத்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில், சிறந்த படத்துக்கான விருதை ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ என்ற குறும்படம் வென்றது. அதன் இயக்குநர் அரிகரசுதனிடம் பேசினோம்.

சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த இவர், சினிமா ஆர்வத்தால் தரமணி அரசு திரைப்பட கல்லூரியில் இயக்குநருக்கான பட்டப்படிப்பையும் முடித்தார். வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு குறும்படம் எடுக்க ஆரம்பித்தார். ‘கண்காணிக்கும் மரணம்’ என்ற இவரது முதல் குறும்படம் 2015-ல், இதே தமிழ் ஸ்டுடியோ விருதை பெற்றது. அந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.

 ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ படம் பற்றியும் உருவாக்கிய விதம் பற்றியும் சொல்லுங்களேன்..?

இது காப்ரியல் மார்க்வஸ் கார்சியஸின் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது. ஒரு உரையாடல் வழியாகவே திரில்லர் அனுபவத்தைக் கொண்டுவரும் முயற்சி. கல்லூரி நூலகத்துக்குள் நூலகருக்கும் ஒரு மாணவிக்குமிடையே நடக்கும் உரையாடல்தான் படம். உரையாடலில் பல உணர்வுகளைக் கொண்டு வருவது சவாலானது. பல முறை ஒத்திகை பார்த்தபின்பே படப்பிடிப்புக்குத் தயாரானோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE