எடப்பாடி ‘சாமி’க்கு சில யோசனைகள்..!

By காமதேனு

ஒரு மண்டல விரதத்துக்குப் பிறகு, கடந்த 20-ம் தேதி தியேட்டர்கள் எல்லாம் புதுப்படங்களை ரிலீஸ் செய்தன. ‘மார்னிங் ஷோ’ பார்க்கிறதுக்காக நான் மதுரை சரஸ்வதி தியேட்டருக்குப் போனேன். தியேட்டருக்குள்ள மணியாட்டுற சத்தம் கேட்டுது. “இன்னைக்கு வெள்ளிக்கிழமை. அதுமட்டுமில்லாம புதுப்படம் வேற ரிலீஸ் ஆகுதுல்ல... அதாம்ணே” என்றார் டிக்கெட் கவுன்டரில் இருந்தவர்.

பேசிக்கொண்டிருந்தபோதே, “ஓரானைக் கன்றை, உமையாள் திருமகனை, போரானைக் கற்பகத்தைப் பேணினால்... வாராத புத்தி வரும், வித்தை வரும், உத்திர சம்பத்து வரும், சக்தி தரும் சித்தி தரும் தான்... சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு - பிள்ளையார் சுழி போட்டு...” என்று சாமி பாட்டைப் போட்டுவிட்டார்கள். சீட்டில் போய் உட்காரவும், “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான்... விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்... தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து”ன்னு ரெண்டாவது பாட்டு.

“ஆஹா, இப்படியெல்லாம் பாட்டு கேட்டு எவ்வளவு நாளாச்சு, சூப்பர்யா”ன்னு உட்கார்ந்திருந்தேன். திடீர்னு திரையிலும் கோயிலைக் காட்டினாங்க. என்னடா தியேட்டர் மாறி வந்திட்டோமான்னு பார்த்தா,

“சுவாமி, அர்ச்சனை என் பேருக்கு இல்ல, சாமி பேருக்கு”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE