“திரைப்படத்தைக் காட்டிலும் ஆவணப்படம் இயக்குவது கடினம்!”-  ரவிசுப்பிரமணியன்

By காமதேனு

முன்றில் இலக்கிய அமைப்பு நடத்திய மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழா, சென்னை மியூசிக் அகாடமியில் ஏப்ரல் 16 அன்று நடந்தது. இந்த ஆண்டு, கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான எஸ்.சண்முகம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இனி வருடந்தோறும் இலக்கியத் துறையில் சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படவிருக்கிறது.

விருதுபெற்றுள்ள ரவிசுப்பிரமணியனிடம் பேசியதிலிருந்து...

இந்த விருது உங்களுக்குள் என்ன மாதிரியான உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது?

என் கல்லூரிக் காலத்தில் மா.அரங்கநாதன் எழுதிய ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கவிதையியல் சார்ந்த புத்தகத்தைப் படித்துத்தான் சில தெளிவுகளைப் பெற்றேன். அதன் பிறகு அவருடைய கதைகளைப் படித்தபின் அவரது ஆளுமை மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இலக்கியப் பங்களிப்புக்காகப் பல விருதுகளை நான் பெற்றிருந்தாலும் நான் நேசித்த, பழகிய இலக்கிய மேதையின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம். மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE