சத்யஜித் ராயின் ஹாலிவுட் திரைக்கதை

By காமதேனு

உலகப்புகழ் பெற்ற இந்திய திரைப்பட மேதை சத்யஜித் ராய் அறிவியல் புனைகதைகளும் எழுதியிருக்கிறார். தனது ‘போங்குபபுர் பந்து’ என்ற சிறுகதையை மையமாக வைத்து 1960-களில் ‘ஏலியன்’ என்ற முழுநீளப் படத்துக்கான திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

ஹாலிவுட்டைச் சேர்ந்த கொலம்பியா பிக்சர்ஸ் ‘ஏலியன்’ படத்தைத் தயாரிக்க முன்வந்தது. முக்கியக் கதாபாத்திரத்தில் பீட்டர் செல்லர்ஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டுவிட்டது. இந்தத் திரைக்கதையை உரிமையின்றித் தழுவித்தான் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ‘ஈ.டி.’ திரைப்படத்தை எடுத்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. இப்போது ‘ஏலியன்’ திரைக்கதை புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘ட்ராவல்ஸ் வித் தி ஏலியன்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தை சத்யஜித் ராயின் மகன் சந்தீப் ராய் தொகுத்திருக்கிறார்.

-ஜெ.சரவணன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE