சம்பாரண் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, மத்திய தகவல் தொடர்புத் துறையின் ‘பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்’ சார்பில் மூன்று காந்திய நூல்கள் சென்னையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் வெளியிடப்பட்டன.
‘சம்பாரணில் காந்தி’, ‘காந்தியுடன் நாங்கள்’, ‘மகாத்மா காந்தியின் ஓர் உலகம்’ ஆகிய இந்த நூல்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி நூல்களை வெளியிட்டவர், ஓய்வுபெற்ற நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன். காந்தியின் கருத்துகள் எக்காலத்துக்கும் பொருந்துகின்றன என்பதை விளக்கிப் பேசினார்.
“பசுவதை பற்றிப் பேசும்போது, ‘ஒரு பிராணிக்காக ஒரு மனிதனைக் கொல்வது மாபெரும் தவறு; முட்டாள்தனம்; மனிதத்தன்மையற்ற செயல்” என்று காந்தி சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டியது ஓர் உதாரணம்.