ஆண்டு விழா அட்ராசிட்டிகள்

By காமதேனு

ரெண்டு மாசமா எங்க திரும்புனாலும், பள்ளி ஆண்டுவிழா நடந்தமேனிக்கே இருக்கு. போன வாரம் சனிக்கிழமை என் சின்ன மவன் பள்ளிக்கூட ஆண்டு விழா. ஒரு பாப்பா மாறுவேசத்துக்காக வித்யாசமா சேலை கட்டி நடந்து வந்துச்சி. “இந்திராகாந்தி வேஷமா?”ன்னு கேட்டேன், “இல்ல, பிக்பாஸ் ஓவியா”ன்னு சொல்லுச்சி. இன்னொரு பையனைப் பாத்து, “அந்நியன் விக்ரம்தான?” என்றேன். அவன், “அப்துல்கலாம்”னு கோபமாச் சொல்லிட்டுப் போயிட்டான்.

‘மேட் இன் இண்டியா’, ‘ஐயம் பார்பி கேர்ள்’ மாதிரி, ‘வெல்கம் டான்ஸ்’க்குன்னே நேந்துவிட்ட சில பாடல்கள் இருக்கே, அதே பாட்டோடத்தான் நிகழ்ச்சி தொடங்குச்சி. ஆடச் சொல்லிக் கொடுக்கிறாங்களோ இல்லையோ, கையில அட்டையப் பிடிச்சிக்கிட்டு ‘WELCOME’ என்று வரிசையா வந்து நிக்கச் சொல்லிக் கொடுத்திருப்பாங்க.

ஆனாலும், ரொம்பச் சரியா அதில்தான் பிள்ளைங்க சொதப்புனாங்க. இரண்டு மூன்று டீச்சர்கள் மேடைக்கு ஏறி ‘W'வை தூக்கி முன்னாடி நிறுத்துறதும், ‘0' வை நடுவில் தூக்கிப்போடுறதுமா இருந்தாங்க.  மறுபடியும் சில வாண்டுகள் ஓடிப்போய் தன்னுடைய கேர்ள் ஃபிரண்ட் பக்கத்தில் நிற்க, மேடையில நடக்கிறது நடனமா, குறுக்கெழுத்துப்போட்டியான்னு குழப்பமே வந்திடுச்சி. ஆனாலும், குட்டிக்குழந்தைகள் மேடையில் செய்கிற குளறுபடிகள்தான் அந்த விழாவுக்கே அழகு.

அடுத்து பரதநாட்டியம். அதைச் சொல்லிக்குடுத்த டீச்சருக்கே பரதநாட்டியத்தைப் பற்றித் தெரியாதுன்னு புரிஞ்சுது. ஆடுற பிள்ளைங்க டிவியில கூட பரதநாட்டியம் பார்த்திருக்க மாட்டாங்க போல. பார்க்கிற பெத்தவங் களுக்கும் அதுல இன்ட்ரஸ்ட் இருக்காது. அப்புறம் ஏன்யா, வம்படியா அதைப் போட்டு கொலையாக் கொல்றீங்க?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE