தனித்து வாழும் பெண்களின் முதல் ஆவணம்

By காமதேனு

இந்தியாவில், சுமார் ஏழு கோடியே நாற்பது லட்சம் பெண்கள் துணையில்லாமல் வாழ்கிறார்கள். இவர்களைப் பற்றிய முதல் புனைவுப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஸ்ரீமொயி பியு குண்டு. திருமணமாகாதவர், விவாகரத்தானவர், கணவனை இழந்தவர், சுயபால்விழைவு கொண்டவர் என ஆண் துணையில்லாமல் வாழும் 3,000 பெண்களிடம் பேசி, ‘ஸ்டேட்டஸ் சிங்கிள்’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் அவர். “குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்துகொள் என்று பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதை நிறுத்துங்கள். பெண்களுக்குக் கல்வி அளித்து அவர்கள் விரும்பும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் அதிகாரத்தைப் பெறச் செய்யுங்கள்” என்பதுதான் ஸ்ரீமொயி நம் அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள்.

நூலரங்கம்: நம் பறவைகள், நம் மொழியில்... - ஆசை

சங்க காலம்தொட்டு தமிழ் இலக்கியத்தின் பிரிக்க முடியாத அம்சமாகப் பறவைகள் இடம்பெற்றுவந்திருக்கின்றன. இயற்கையின் எழிலைத் தமிழ் மொழி போல அழகாக வெளிப்படுத்திய வேறு மொழிகளைக் காண்பதரிது. இயற்கைக்கு எதிரான திசையில் மனிதகுலம் செல்ல ஆரம்பித்த நவீன காலத்தின் சாபத்துக்குத் தமிழும் ஆளானது பெரும் கொடுமை. தமிழ்நாட்டுப் பறவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆங்கிலப் புத்தகங்களை நாட வேண்டிய சூழல்தான் இருந்தது. இந்தக் குறையைப் போக்கிய முக்கியமான புத்தகம் முனைவர் க.ரத்தினத்தின் ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ (2002). அந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு சில ஆண்டுகளுக்கு முன்புவெளிவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE