அட, பல்லு வெளக்குறது ஒரு குத்தமாய்யா?

By காமதேனு

நகைச்சுவை புத்தகம்னு நினைச்சி வாங்குற பெரும்பாலான பொஸ்தகங்கள் செம மொக்கையா இருக்கும். சிலசமயம், ரொம்ப சீரியஸா எழுதுன புத்தகங்கள் எதிர்பாராதவிதமா வாசகர்களை விழுந்துவிழுந்து சிரிக்க வெச்சிரும். அப்டி, சமீபத்துல நான் படிச்ச ரெண்டு, மூணு புத்தகங்களை இங்க அறிமுகப்படுத்தப் போறேன்.

ஒண்ணு,  ‘பல்லு வௌக்காதீங்க’ என்ற புத்தகம். “நம் தேசத்தில் உள்ள அனைவரும் நோய்நொடி இல்லாமல் வாழணும்னா, ஒருத்தரும் பல்லு வௌக்கக்கூடாது. அது தேவையே இல்லாத கெட்ட பழக்கம். பல் வௌக்காத மிருகங்க எல்லாம் ரொம்ப ஆரோக்கியமா வாழுது. சிங்கம், புலியெல்லாம் ஆஸ்பத்திரிக்கா போகுது ?

தினம் தினம் பல்லு வௌக்கும் மனுஷன் மட்டுமே நோய் நொடியில அல்லல்படுறான். சர்க்கரை, இதயநோய், கேன்சர் போன்ற நோய்கள் அதிகரிக்கிறதுக்குக் காரணமும், இனிமே வரப்போற புது நோய்களுக்குக் காரணமும் பல் வௌக்குற கெட்ட பழக்கம்தான்”  இப்படிப் போகுது அந்தப் புத்தகம்.

திடீரென்று பல் வௌக்குவதைக் கைவிட்டா, என்னமோ போல் இருக்கும்ல. அதைச் சமாளிக்கவும் வழி சொல்லுது புத்தகம். முதல்ல பேஸ்ட்டை மட்டும் தவிர்த்துட்டு, வெறும் பிரஷ்ஷை வைத்துப் பல் துலக்கணுமாம். நாளடைவுல அதையும் விட்ருணுமாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE