நூலரங்கம்: அடக்குமுறைக்கு எதிரான குரல்

By காமதேனு

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்தாடும்போதும், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போதும் கவிதைகளின் வழிகலகக் குரல்கள் ஒலித்த வண்ணம் இருக்கின்றன. அடிமைக்குள்ளும் அடிமையாக நடத்தப்படுகிற தலித் பெண்களின் நிலை குறித்து அவர்கள் மத்தியில் இருந்தே எழும் குரல்கள் வலிமையானவை.

அப்படியான குரல்களின் தொகுப்பே இந்த நூல்.மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியஐந்து மொழிகளைச் சேர்ந்த 17 தலித் பெண் கவிஞர்களின்கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. சில கவிதைகளை மூலமொழியிலிருந்தும் சிலவற்றை ஆங்கிலம் வழியாகவும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

சாதியமும், ஆணாதிக்கமும் பெண்களின் மீது நடத்தும் கோரத் தாண்டவமே இந்தக் கவிதைகளின் அடிநாதம். சில கவிதைகளோடு அவை தோன்றிய பின்னணியையும் சொல்லியிருப்பது, கவிதைகளை அந்தக் கணத்தின் வலியோடும் சீற்றத்தோடும் புரிந்துகொள்ள உதவுகிறது.

மகாராஷ்டிரத்தின் கைர்லாஞ்சியில் படுகொலை செய்யப்பட்ட தலித் குடும்பம் குறித்தும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் குறித்தும் மராத்திக் கவிஞர் பிரதன்யா தயா பவார் இப்படிச் சொல்கிறார்: இந்த ஆதித்துயர்/பல யுகங்களாக இருந்துவந்துள்ள துக்கம்/ஒரு குவளை நஞ்சு எனக் கொண்டு/நாங்கள் விழுங்கிய துயர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE