நீலகிரி மலையில் தனித்துவமிக்க பழங்குடி இனங்களுள் தோடர்கள் இனமும் ஒன்று. தோடர் மொழியைத் திராவிட மொழிக் குடும்பத்துக்குள் வகைப்படுத்துவார்கள் மொழியியல் அறிஞர்கள். இன்று சுமார் ஆயிரம் பேரால் மட்டுமே பேசப்படும் தோடர் மொழியை அழிந்துவரும் மொழிகளுள் ஒன்றாக அறிவித்திருக்கிறார்கள்.
உலகமே ஒரு கிராமமாகும் நவீனக் கனவில் நாம் வேகவேகமாகத் தொலைத்துக் கொண்டிருப்பவற்றில் பழங்குடியினர் மொழிகளும் அவர்களின் பண்பாடுகளும் அடங்கும். தமிழ் மொழியின் ஆதிக்கத்தால் தோடர் மொழிக்கும், இந்து மதத்தின் தாக்கத்தால் அவர்களின் பண்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற தருணங்களில் அம்மக்களின் மொழியையும் பண்பாட்டையும் பதிவுசெய்வதென்பது மிகவும் முக்கியமானது.
தோடர் இனத்தவர்களின் பாடல்களும் கதைகளும் அவர்கள் மொழியிலேயே தொகுக்கப்பட்டு, ரோமன் வரிவடிவத்தில் இத்தொகுப்பில் கொடுக்கப்பட்டிருக் கின்றன. கூடவே, தமிழ் மொழிபெயர்ப்பும். தோடர்
களின் ஆயர்குல வாழ்க்கை, எருமை மாடுகள், கோயில், இயற்கை, நட்பு என மிகவும் எளிய வாழ்வொன்றை இந்தப் பாடல்களும் கதைகளும் நமக்கு முன்வைக்கின்றன. 1918-ல் நீலகிரியில் மலை ரயில் விடப்பட்டதைப் பற்றிய பாடல்