ஆடல் பாடல் அரசியல்...!

By காமதேனு

நாகர்கோவில் ‘ஸ்காட்’ கிறிஸ்தவக் கல்லூரிக்கு அறிமுகம் தேவை இல்லை. 125 ஆண்டு பாரம்பரியமிக்க இந்த கலை, அறிவியல் கல்லூரியில் 3,025 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். 17 இளங்கலை துறைகள், 12 முதுகலை துறைகள், பத்து எம்.ஃபில், 11 ஆய்வுத்துறைகள் எனக் கிளை பரப்பியுள்ள இக்கல்லூரி பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் உருவாக்கிய பெருமைக்குரியது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவரே!

காமதேனுவுக்காகக் கல்லூரிக்குள் புகுந்ததுமே பட்டாம் பூச்சி கூட்டத்தில் படுஉற்சாகம். “நேத்துத்தான் அப்பா காமதேனு புத்தகம் வாங்கிட்டு வந்தாரு. இன்னும் வாசிச்சே முடிக்கல. அதுக்குள்ள நீங்களே தேடி வந்துட்டீங்களே” என மாணவி ஒருவர் பரபரக்க, சிரித்துக்கொண்டு கல்லூரிக்குள் வலம்வந்தோம்.

காயத்ரி மாஸ்டர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE