தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 5 மாநிலத்துக்கு ரூ.1,555 கோடி கூடுதல் நிதி

By KU BUREAU

தேசிய பேரிடர் உதவி நிதியின் கீழ் 5 மாநிலங்களுக்கு ரூ.1554.99 கோடி கூடுதல் நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.

கடந்தாண்டு ஆண்டு மழை வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு உதவும் வகையில் இந்த கூடுதல் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவியில் ஆந்திரப் பிரதேசம் ரூ.608.08 கோடியும், நாகாலாந்து ரூ.170.99 கோடியும், ஒடிசா ரூ.255.24 கோடியும், தெலங்கானா ரூ.231.75 கோடியும், திரிபுரா ரூ.288.93 கோடியும் பெறும்.

2024-25 நிதியாண்டில் 27 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் உதவி நிதிக்கு ரூ.18,322.80 கோடிuய மத்திய அரசு விடுவித்துள்ளது. 18 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4808.30 கோடியும், 14 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.2208.55 கோடியும், 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.719.72 கோடியும் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE