ம.பி.யில் போலீஸ் என்கவுன்ட்டரில் 3 பெண் மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
ம.பி.யின் பாலாகாட் மாவட்டத்தில் சத்தீஸ்கர் எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் மாநில காவல் துறையின் மாவோயிஸ்ட் எதிர்ப்பு படை மற்றும் உள்ளூர் போலீஸார், மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கர்கி காவல் எல்லைக்குட்பட்ட ரோண்டா அருகில் போலீஸாருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் நேற்று காலை மோதல் ஏற்பட்டது. இதில் 3 பெண் மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் தினசரி பயன்பாட்டுக்கான பொருட்களை போலீஸார் கைப்பற்றினர். தப்பியோடிய மாவோயிஸ்ட்களை பிடிக்க 12 போலீஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.