புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில், ஆம் ஆத்மி தலைவர்கள் அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வியை தழுவியுள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக 47 இடங்களை வசப்படுத்துகிறது. ஆம் ஆத்மி 23 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. வெற்றிக்கு 36 தொகுதிகள் போதுமென்ற நிலையில் மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது. எனவே 26 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றவுள்ளது.
அதே நேரத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புதுடெல்லியில் போட்டியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கேஜ்ரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங்கிடம் தோல்வியுற்றார். அதேபோல் ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவும் தோல்வியைத் தழுவினர்.
மணீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தனது தோல்வி குறித்து அவர், "கட்சித் தொண்டர்கள் சிறப்பாகப் போராடினர். நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்தோம். மக்களும் எங்களை ஆதரித்துள்ளனர். ஆனால், நான் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். வெற்றி பெற்ற வேட்பாளரை நான் வாழ்த்துகிறேன். அவர் தொகுதிக்காக உழைப்பார் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மியின் தேசிய முகங்களாக கருதப்படும் கேஜ்ரிவால், சிசோடியாவின் தோல்வி அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
» நாம் தமிழரின் வெறுப்பு அரசியலை ஈரோடு கிழக்கு மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்: முத்தரசன் அதிரடி
» கிருஷ்ணகிரி அருகே மாணவி பாலியல் வன்கொடுமை: பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு!