டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: பெரும்பான்மை பெறுகிறது பாஜக; முட்டி மோதும் ஆம் ஆத்மி!

By KU BUREAU

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 19 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. டெல்லி பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. 70 தொகுதிகளில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்துமே பாஜக வெற்றி பெறும் என்றே கூறியிருந்தன. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 29 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. வெற்றிக்கு 36 தொகுதிகள் போதுமென்ற நிலையில் பாஜக 40+ தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE