இந்திய ராணுவத்துக்கு ரூ.10,147 கோடியில் பினாகா ராக்கெட் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ராணுவ பயன்பாட்டுக்காக பினாகா என்ற பெயரில் ராக்கெட் லாஞ்சர் வாகனத்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியது. இந்த பினாகா ராக்கெட் லாஞ்சர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு 10 படைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பினாகா ராக்கெட் லாஞ்சர் வாகனத்திலிருந்து ராக்கெட் குண்டுகள் மற்றும் சிறிய ரக ஏவுகணைகளை வீச முடியும். இதில் இருந்து வீசப்படும் ராக்கெட் குண்டு 45 கி.மீ தூரம் வரை சென்று எதிரி இலக்கை தகர்க்கும். இதில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் 37 கி.மீ தூரம் வரை சென்று வெடித்து பல சிறிய குண்டுகளாக சிதறி வெடிக்கும். அப்போது எதிரி நாட்டு ராணுவத்தின் டாங்க்குகள் மற்றும் வீரர்கள் அழிக்கப்படுவர்.
பினாகா ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டு மற்றும் ஏவுகணைகளை அரசுக்கு சொந்தமான மியூனிசன்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் எகனாமிக் எக்ஸ்ப்ளோசிவ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனமும் தயாரிக்கின்றன.
இந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ.5,700 கோடிக்கு பினாகா ராக்கெட் குண்டுகளையும், ரூ.4,500 கோடிக்கு ஏவுகணைகளையும் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் கையெழுத்திட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை மேம்படுத்துவதில், இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாக இருக்கும்.
» கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 8,000 பக்தர்களுக்கு அனுமதி
» ‘ஸ்டாலின் குடும்ப வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்’ - அதிமுக ஜெ. பேரவை தீர்மானம்