7.7 கோடி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்: பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு முக்கிய அறிவிப்புகள்!

By KU BUREAU

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் வேளாண் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் வேளாண் துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

கிசான் கடன் அட்டை மூலம் 7.7 கோடி விவசாயிகள் குறுகிய கால கடன்பெற நடவடிக்கை எடுக்கப்படும். கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பருப்பு உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான சாகுபடியை தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற 6 ஆண்டு கால சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும். பருத்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பிஹாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும். பிஹாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் - NIFTEM) அமைக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE