தூக்கிலிட்டாலும் வரவேற்பேன்: கொல்கத்தா மருத்து மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தாய் பேட்டி!

By KU BUREAU

என் மகனைத் தூக்கிலிட்டாலும் வரவேற்பேன் என கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சஞ்சய் ராயின் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வழக்கில் அங்கு தன்னார்வலராக இருந்த சஞ்சய் ராய் குற்றவாளி என கடந்த வாரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அவரது தாயார் மலாட்டி என் மகனைத் தூக்கிலிட்டாலும் வரவேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, “எனக்கு 3 மகன்கள் உள்ளனர். பயிற்சி மருத்துவர் எனகும் மகள் போன்றவர்தான். அவருடைய தாயின் வலியையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வழக்கில் என் மகன் குற்றவாளி என்றால் அவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். நீதிமன்றம் என் மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. என் மகனுக்காக தனியாக அழுவேன். தண்டனையை விதியாக ஏற்றுக் கொள்வேன்” எனக் கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE