டெல்லி கண்காட்சியில் 2 நாளில் 90 வாகனம் அறிமுகம்

By KU BUREAU

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாரத் மண்டபத்​தில் வருடாந்திர ‘பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ’ என்ற பெயரில் வாகன கண்காட்சி கடந்த 17-ம் தேதி தொடங்​கியது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இதில் உலகம் முழு​வதும் உள்ள முன்னணி வாகன உற்பத்​தி​யாளர்கள் பங்கேற்றுள்​ளனர். 1,500-க்​கும் மேற்​பட்ட அரங்​குகள் அமைக்​கப்​பட்​டுள்ளன.

பல மோட்​டார் வாகன உற்பத்தி நிறு​வனங்கள் தங்களது புதிய இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை இக்கண்​காட்​சி​யில் அறிமுகம் செய்தன. 2 நாளில் மட்டும் 90-க்​கும் மேற்​பட்ட வாகனங்கள் அறிமுகம் செய்​யப்​பட்டன. குறிப்​பாக, மாரு​தி​யின் இ-வி​தாரா, டாடா​வின் ஹாரியர் மற்றும் டொயோட்​டா​வின் அர்பன் குரூசர் உள்​ளிட்ட 26 மின்​சார வாக​னங்​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE