ஒங்கோல்: ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், சிவண்ண பாளையத்தை சேர்ந்த 6 பேர் சிங்கராய கொண்டா மண்டலம், பாகாலா கடற்கரையில் நேற்று குளிக்கச்சென்றனர். கடலில் குளித்தபோது அவர்கள் 6 பேரும் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாரும், தீயணைப்பு படையினரும் கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாதவா (25), ஜென்சிகா (15), யாமினி (16) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.சம்பவ இடத்துக்கு அமைச்சர் பால வீராஞ்சநேய சுவாமி சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.