புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதி!

By KU BUREAU

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு ஹெச்எம்பிவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹெச்எம்பிவி தொற்று கடந்த சில நாட்களாக மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இந்த வைரஸ் தொற்று முதல் முறையாக சிறுமி ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் சளி, காய்ச்சல் பாதிப்பால் சிறுமி அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிறுமி ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஹெச்எம்பிவி வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழந்தை முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE