டெல்லிக்கு பிப்ரவரி 5ல் ஒரே கட்டமாக தேர்தல் - வெற்றி பெறப்போவது யார்?

By KU BUREAU

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

டெல்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர் இதில் ஆண்கள் 83.49 லட்சம், பெண்கள் 71.74 லட்சம் ஆகும். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்து முதல்வராவேன் என்று சூளுரைத்து சுழன்று வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். இந்த சூழலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி டெல்லியில் கால் ஊன்ற வேண்டும் என்று பாஜகவும் கடுமையாக முயற்சிக்கிறது. காங்கிரஸும் டெல்லியில் முட்டி மோத தயாராகிறது.

டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE