புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் எப்போது என்பது தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கிறது.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்து முதல்வராவேன் என்று சூளுரைத்து சுழன்று வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். இந்த சூழலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி டெல்லியில் கால் ஊன்ற வேண்டும் என்று பாஜகவும் கடுமையாக முயற்சிக்கிறது. காங்கிரஸும் டெல்லியில் முட்டி மோத தயாராகிறது. இந்த சூழலில் இன்று டெல்லியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
» சென்னை | பாரில் இளம் பெண்களை வைத்து ஆபாச நடனம்: உரிமையாளர் உட்பட 3 பேர் கைது
» 'கேம் சேஞ்சர்’ பட விழாவிற்கு வந்த ரசிகர்கள் 2 பேர் உயிரிழப்பு!