நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்!

By KU BUREAU

இன்று ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் முக்கிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று காலை முதல் ரூ.14.50 குறைந்துள்ளது.

இ-வே பில் கட்டுப்பாடுகள்: 180 நாட்களுக்கு மேல் பழமையான அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே இ-வே பில்களை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நிலத்தடி தொடர்பு உள்கட்டமைப்பின் நிறுவல் மற்றும் பராமரிப்பை மேம்படுத்தும். ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த விதிகளைப் பயன்படுத்தி தங்கள் சேவைகளை மேம்படுத்த உள்ளன.

பல பழைய ஆண்ட்ராய்டு செல்போன்களில் இன்று முதல் வாட்ஸ்-அப் செயலி, செயல்படுவதை நிறுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி S3, எல்ஜி நெக்ஸஸ்4, ஹெச்டிசி ஒன் எக்ஸ் மற்றும் மோட்டோ ஜி மாடல் செல்போன்களில் வாட்ஸ் செப் செயலியின் செயல்பாடுகள் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு செல்ல விசா பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE