மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து 16 மணி நேரத்துக்குப்பின் மீட்கப்பட்ட 10 வயது சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டம் பிப்லியா கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சுமித் மீனா. இவன் கடந்த சனிக்கிழமை காற்றாடைியை பறக்க விட்டு விளையாடினான். அப்போது அவன் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அதில் தண்ணீர் வராததால், முடாமல் விடப்பட்டிருந்தது. ஆழ்துளை கிணற்றில் 39 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்கும் முயற்சிகள் உடனடியாக தொடங்கின. ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் 25 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு, சிறுவனை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றது. ஆள்துளை கிணறு அருகே 25 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு சுமார் 16 மணி நேரம் கழித்து, அந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் ரகோகர் மருத்துவமனையில் அந்த சிறுவன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து குணா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜ்குமார் ரிஷ்கிஸ்வர் கூறுகையில், ‘‘ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் இரவு முழுவதும் கடும் குளிரில் இருந்துள்ளான். அவனது கை, கால்கள் வீங்கியிருந்தன. உடை நனைத்திருந்தது. வாயில் மண் இருந்தது ’’ என்றார். 16 மணி நேர போராட்டத்துக்குப்பின் சிறுவன் மீட்கப்பட்டும், மருத்துவமனையில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் சிறுமி: ராஜஸ்தானில் கோத்புட்லி பகுதியில் 700 அடி ஆழ ஆள்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி சேத்னாவை மீட்கும் முயற்சி 7-வது நாளாக தொடர்கிறது. எப்படியாவது தனது மகளை மீட்டு தாருங்கள் என அதிகாரிகளிடம் சிறுமியின் தாய் தோலி தேவி கூறியுள்ளார். ஆழ்துறை கிணற்றின் பக்கவாட்டில் 8 அடி குழிதோண்டி சிறுமியை மீட்கும் இறுதிகட்ட முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மாற்று வழியில் சிறுமியை மீட்க மீட்பு குழுவினர் தாமதித்து விட்டனர் என உள்ளூர் மக்கள் விமிர்சித்து வருகின்றனர்.
» நமக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் நல்லகண்ணு: நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
» மாணவர்களின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது: பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு