வேலைவாய்ப்பு திருவிழா திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட்ட 71,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று காலை வழங்குகிறார்.
‘ரோஜ்கர் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழா திட்டத்தின் கீழ், மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். அதன்படி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 71,000-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று காலை 10.30 மணிக்கு வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
தேர்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறுகிறது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
» அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களுடன் டிச.27, 28-ம் தேதிகளில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
» ரூ.1.5 கோடி இணையதள சேவை கட்டண நிலுவை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஸ் - அண்ணாமலை மோதல்