அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மாநிலங்களவையில் கார்கே தாக்கல்

By KU BUREAU

புதுடெல்லி: அரசியலமைப்பு சாசனம் இயற்றப்பட்டு 75-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ‘இந்திய அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டு பெருமைமிகு பயணம்’ என்ற தலைப்பில் மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்தது.

இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அம்பேத்கர் கோஷத்தை தற்போது அடிக்கடி எழுப்புவது பேஷனாகிவிட்டது. இதற்கு பதில் கடவுள் பெயரை எதிர்க்கட்சியினர் கூறினால் அவர்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும்” என்று கூறினார். அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு எதிராக மாநிலங்களவை தலைவரிடம் உரிமை மீறல் நோட்டீஸை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று வழங்கினார்.

அதில், “அரசியல்சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கரை அவமதித்து உள்துறை அமைச்சர் கூறிய கருத்து உரிமை மீறல் மற்றும் அவையின் கண்டனத்துக்குரியது. அதனால் மாநிலங்களவை 188-வது விதிகளின் படி அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குகிறேன். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE