'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இளம்பெண் ரேவதி என்பவர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரேவதியின் மகனும் இன்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுவனுக்கு வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகனும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.