புதுடெல்லி: மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப் தன்கரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையின் சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். இப்படி செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்தை முற்றிலுமாக முடக்குகிறார் என குற்றம்சாட்டி மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக இண்டியா கூட்டணி கட்சிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளன.
இது குறித்து இன்று ஆளும் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பவே மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம் எழுந்தது. இதனையடுத்து அவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 16ம் தேதி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.