டங்ஸ்டன் சுரங்க திட்டம்: மத்திய அமைச்சரை நேரில் சந்தித்தார் அண்ணாமலை!

By KU BUREAU

புதுடெல்லி: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்று நாம் ஏற்கனவே விடுத்த கோரிக்கை தொடர்பாக, மதுரை மாவட்ட சகோதர சகோதரிகள் சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அவர்களுடன், இன்று டெல்லியில் நமது மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்துப் பேசினோம்.

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, எங்கள் கோரிக்கைகளையும், திமுக அரசு வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து, தவறான தகவல்களை கொடுத்து, டங்ஸ்டன் சுரங்கத்திற்கான எதிர்ப்புக்கு வழிவகுத்தது குறித்தும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார். மேலும், சுரங்கம் அமைக்க ஒப்பந்தம் அறிவிப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்வுகளின் கால வரிசையை எங்களுக்கு விரிவாக விளக்கியதுடன், மக்களின் நலன் சார்ந்த சாதகமான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நமது பிரதமர் மோடி தமிழக மக்களின் நலன்களை எப்போதும் மனதில் கொண்டவர். எனவே, அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளின் இன்னல்களுக்கு, நிச்சயம் சாதகமான தீர்வு கிடைக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE