‘லக்கி பாஸ்கர்’ படத்தால் வினை - பணக்கார கனவில் விடுதியிலிருந்து 9ம் வகுப்பு மாணவர்கள் எஸ்கேப்!

By KU BUREAU

விசாகப்பட்டினம்: நடிகர் துல்கர் சல்மானின் ‛லக்கி பாஸ்கர்' படத்தை பார்த்த 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் அவர் போன்று ஆக வேண்டும் என்று எண்ணி விடுதியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கி படிக்கும் சரண் தேஜா, ரகு, கார்த்திக், கிரண்குமார் ஆகிய 9 வகுப்பு மாணவர்கள், சமீபத்தில் ‘லக்கி பாஸ்கர்’ படத்தை பார்த்துள்ளனர்.

அதில் துல்கர் சல்மான் கார், வீடு, பணம் உள்ளிட்டவற்றை குறுக்கு வழியில் சம்பாதித்து ஆடம்பரமாய் வாழ்வதைப் போல தாங்களும் சம்பாதிப் போம் என சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் துல்கர் சல்மான் போல நாங்களும், கார், வீடு உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறோம் என்று நண்பர்களிடம் கூறிவிட்டு விடுதியில் இருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.

தற்போது வரை அவர்கள் எங்கு சென்றனர் என்பது தெரியவந்தது. இதுபற்றி மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவர்களின் புகைப் படங்களை அனைத்து காவல் நிலையங்களிலும் அனுப்பி கண்டுபிடிக்கும் பணியில் அவர்கள் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE