ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 2 பெண்கள் உட்பட 11 பேர் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர்.
ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா 34 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், பாஜக தலைமையிலான தே.ஜ கூட்டணி 24 இடங்களிலும் வென்றது.
இதையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த மாதம் 28-ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் ஜார்கண்ட் அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு மாநில ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வர் ராஜ் பவனில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜார்கண்ட் கட்சியை சேர்ந்த எம்எலஏ.க்கள் சுதிவ்யா குமார், தீபக் மிருவா, ராம்தாஸ் சோரன், சம்ரா லிண்டா, யோகேந்திர பிரசாத் மற்றும் ஹபிஜுல் ஹாசன் ஆகியோர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.
» இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது: மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
» டெல்லிக்கு செல்லும் போராட்டம்: விவசாய சங்க தலைவர்களுடன் பஞ்சாப் போலீஸ் பேச்சுவார்த்தை
கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தீபிகா பாண்டே சிங், சில்பி நேகா திர்கே, இர்பான் அன்சாரி, ராதாகிருஷ்ணா கிஷோர், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் சஞ்சய் பிரசாத் யாதவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்