மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்: ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வரானார்கள்!

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிர மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றார். அவருடன் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதில் பாஜக 132 இடங்களும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களும், அஜித்பவார் என்சிபி 41 இடங்களும் பெற்றன. நவம்பர் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அம்மாநில முதல்வர் தேர்வு குறித்த இழுபறி நீடித்தது. இந்த சூழலில், அக்கூட்டணி சார்பில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைனாத்தில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், மகாராஷ்டிர மாநில முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றார். அவருடன் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, என்சிபி தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE