அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

By KU BUREAU

புதுச்சேரி: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின. மாமல்லபுரம் -புதுச்சேரி இடையே கரையைக் கடந்த ஃபெஞ்சல் காரணமாக புதுச்சேரி நகரமே வெள்ளக் காடாக மாறியது. இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

அதன்படி, ‘புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், படகுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. சேதம் அடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும்

மழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். மாடு உயிரிழப்புக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் கன்றுக் குட்டிக்கு ரூ.20 ஆயிரம் ஆகியவை வழங்கப்படும்’ என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE