குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் திடீர் ரத்து! 

By KU BUREAU

சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் ஃபென்ஜல் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வந்துள்ளார், தற்போது அவர் நீலகிரியில் தங்கியுள்ளார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த சூழலில் வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் ஃபென்ஜசல் புயலானது, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவரின் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE