அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து சோதனை

By KU BUREAU

புதுடெல்லி: அணு ஆயுத தாக்​குதல் நடத்​தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்​மூழ்கி​யில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்​யப்​பட்​டது. இந்த ஏவுகணை 3,500 கி.மீ. சீறிப் பாய்ந்து துல்​லியமாக இலக்கை அழித்​தது.

அணு சக்தி​யில் இயங்​கும் இந்தியா​வின் முதல் நீர்​மூழ்​கியான ஐஎன்எஸ் அரிஹந்த் கடந்த 2016-ம் ஆண்டில் கடற்​படை​யில் சேர்க்​கப்​பட்​டது. இந்த நீர்​மூழ்கி​யில் 750 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட கலாம் 15 ரக ஏவுகணைகள் பொருத்​தப்​பட்டுஉள்ளன.

இந்தியா​வின் இரண்​டாவது அணு சக்தி நீர்​மூழ்​கியான ஐஎன்எஸ் அரிகாட் கடந்த ஆகஸ்ட் மாதம் கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. விசாகப்​பட்​டினம் கடற்​படைத் தளத்தை மையமாக கொண்டு இயங்​கும் இந்த நீர்​மூழ்கி​யில் 3,500 கி.மீ. சீறிப் பாயும் கலாம் 4 ரக ஏவுகணைகள் பொருத்​தப்​பட்டு உள்ளன. கடந்த 27-ம் தேதி ஐஎன்எஸ் அரிகாட் நீர்​மூழ்கி​யில் இருந்து கலாம் 4 ஏவுகணை சோதனை நடத்​தப்​பட்​டது. கடலுக்கு அடியில் முகாமிட்​டிருந்த நீர்​மூழ்கி​யில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை 3,500 கி.மீ. தொலை​வில் இருந்த இலக்கை துல்​லியமாக தாக்கி அழித்​தது. கலாம் 4 ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்​லும் திறன் கொண்டவை ஆகும்.

இதுகுறித்து இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறிய​தாவது: நீர்​மூழ்கி​யில் இருந்து அணு ஆயுத தாக்​குதல் நடத்​தும் திறன் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்​டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடு​களிடம் மட்டுமே உள்ளது. இந்த பட்டியலில் 6-வது நாடாக இந்தியா​வும் இணைந்​திருக்​கிறது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்​மூழ்கி​யில் பொருத்​தப்​பட்​டிருக்​கும் கலாம் 15 ரக ஏவுகணைகள் மூலம் 750 கி.மீ. வரை மட்டுமே தாக்​குதல் நடத்த முடி​யும். அதாவது பாகிஸ்​தான் உள்ளிட்ட நாடுகள் மீது மட்டுமே தாக்​குதல் நடத்த முடி​யும்.

தற்போது ஐஎன்எஸ் அரிகாட் நீர்​மூழ்கி​யில் இருந்து 3,500 கி.மீ. தொலைவு சீறிப் பாயும் கலாம் 4 ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்​துள்ளோம். இதன்​மூலம் சீனா உள்ளிட்ட நாடுகள் மீதும் அணு ஆயுத தாக்​குதல் நடத்த முடி​யும். அடுத்​தகட்​டமாக ஐஎன்எஸ் அரிதமன் என்ற அணுசக்தி நீர்​மூழ்கி தயாரிக்​கப்​பட்டு வருகிறது. இது வரும் 2025-ம் ஆண்டில் கடற்​படை​யில் சேர்க்​கப்​படும்.

இந்த நீர்​மூழ்கி​யிலும் கலாம் 4 ஏவுகணைகள் பொருத்​தப்​படும். இந்தியா​வின் 4-வது அணு சக்தி நீர்​மூழ்கி தயாரிக்​கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீர்​மூழ்கி​யில் இருந்து அணு ஆயுத தாக்​குதல் நடத்​தும் திறன் பாகிஸ்​தானுக்கு கிடை​யாது. சீன கடற்​படை​யால் நீர்​மூழ்கி​யில் இருந்து அணு ஆயுத தாக்​குதலை நடத்த முடி​யும். ஆனால் இந்தியா​வோடு ஒப்பிடும்​போது சீன கடற்படை மிகவும் பின்​தங்கிய நிலை​யிலேயே இருக்​கிறது. தற்போது ஐஎன்எஸ் அரிகாட் நீர்​மூழ்கி​யில் இருந்து ஏவப்​பட்ட கலாம் 4 ஏவுகணை சீனா​வுக்கு சவால் விடுக்​கும் வகையில் அமைந்​துள்ளது.

போர் காலங்​களில் வான், தரை வழியாக நடத்​தப்​படும் அணு ஆயுத தாக்​குதலை முறியடிக்க எதிரி நாடுகள் முயற்சி மேற்​கொள்​ளக்​கூடும். ஆனால் கடலுக்கு அடி​யில் ​மு​காமிட்​டிருக்​கும் நீர்​மூழ்கி​யில் இருந்து நடத்​தப்​படும் அணு ஆயுத ​தாக்​குதலை தடுத்து நிறுத்துவது கடினம். இவ்​வாறு இந்​திய கடற்படை வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE