மும்பை: மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே, மும்பையில் நேற்று நடைபெற்ற சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், சிவசேனா(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, வொர்லி தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் மிலிந்த் தியோராவை 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிடும்போது ஆதித்ய தாக்கரேவின் வெற்றி வித்தியாசம் 67,427 வாக்குகள் குறைந்துள்ளது.
சிவசேனா(யுபிடி) கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே, சட்டசபையில் கட்சியின் குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், கட்சியின் தலைமைக் கொறடாவாக சுனில் பிரபு நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே), என்சிபி(அஜித் பவார்) மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்), என்சிபி(சரத் பவார்) அடங்கிய மகாவிகாஸ் அகாதி 49 தொகுதிகளை மட்டுமே வென்றது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 56 தொகுதிகளில் வென்ற நிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
» “இயலாமையைக் காட்டுகிறது” - ராமதாஸ் குறித்த முதல்வர் ஸ்டாலின் விமர்சனத்துக்கு அண்ணாமலை கண்டனம்
» ‘பிஎம் கிசான் யோஜனா’ பெயரில் போலி செயலி - விவசாயிகளிடம் மோசடி நடப்பது எப்படி?