இரு முன்னாள் முதல்வர்களின் மகன்கள் தோல்வி - கர்நாடகாவில் காங்கிரஸ் முழுமையான வெற்றி!

By KU BUREAU

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை ஆகியோர் கர்நாடகா இடைத்தேர்தலில் தோல்வியுற்றனர்.

கர்நாடகாவின் சன்னபட்னா, சந்தூர், ஷிக்கான் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் சன்னபட்னாவில் போட்டியிட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, காங்கிரஸின் சிபி யோகேஸ்வராவிடம் 25,413 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் பேரனும், நடிகரும், அரசியல்வாதியுமான நிகில் குமாரசாமி சன்னபட்னா தொகுதியில் 87,229 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சார்பில் போட்டியிட்ட யோகேஸ்வரா 1,12,642 வாக்குகளும் பெற்றனர். தேவகவுடா, பிஎஸ் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக மற்றும் ஜேடி(எஸ்) தலைவர்கள் சன்னப்பட்டனாவில் நிகிலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். இருப்பினும் அவர் தோல்வியடைந்தார்.

பாஜகவுக்கு மற்றொரு பெரும் அதிர்ச்சியாக, கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை, ஷிக்கான் இடைத்தேர்தலில் காங்கிரஸின் யாசிர் பதானிடம் தோல்வியடைந்தார். பதான் 100756 வாக்குகளும், பரத் 87308 வாக்குகளும் பெற்றனர். அதேபோல சந்தூரில் பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை, காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணா துக்காராம் வெற்றி பெற்றார்.

காங்கிரஸின் வெற்றி பற்றி பேசிய துணை முதல்வர் டிகே சிவக்குமார், “பரத் பொம்மையின் தோல்வி என்று நான் சொல்லவில்லை, இது அவரது தந்தை செய்ததற்கு மக்களிடமிருந்து வந்த செய்தி. வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் கூறும் செய்தி இது. 2028ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு மீது எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தன, ஆனால் பொய்யான குற்றச்சாட்டுகள் பாஜக மற்றும் ஜேடிஎஸ்-க்கு ஒருபோதும் வேலை செய்யவில்லை" என்று கூறினார்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE