13 மாநிலங்களில் 48 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம் என்ன? - முழு விவரம்!

By KU BUREAU

புதுடெல்லி: 13 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதன் முன்னிலை நிலவரம் இதோ...

அசாம் மாநிலத்தின் 5 தொகுதிகளில் தோலை மற்றும் பெஹாலி தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஏஜிபி கட்சி போங்கைகான் தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி சமகுரியிலும், யுபிஎஸ்பிஎல் கட்சி சிட்லி தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

பீகார் மாநிலத்தின் 4 தொகுதிகளில், பாஜக கட்சி ராம்கர், தாராரி இடங்களிலும், ஹெச்ஏஎம் கட்சி இமாம்கஞ்ச் தொகுதியிலும், ஐக்கிய ஜனதா தளம் பெலகஞ்ச் தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

சத்தீஸ்கரின் ராய்பூர் நகர தெற்கு தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது. குஜராத்தின் வாவ் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கர்நாடகாவின் சன்னபட்னா, சந்தூர், ஷிக்கான் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. கேரளாவின் சேலக்கரா தொகுதியில் சிபிஐ(எம்) கட்சியும், பாலக்காட்டில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது.

மத்திய பிரதேசத்தின் விஜய்பூர் தொகுதியில் பாஜகவும், புத்னியில் காங்கிரஸும் முன்னிலையில் உள்ளது. மேகாலயாவின் கேம்பேக்ரே தொகுதியில் என்பிபி கட்சி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சப்பேவால், தேரா பாபா நானக், கிதர்பாஹா தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி பர்னாலாவில் முன்னிலையில் உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் 7 தொகுதிகளில் சோரசி, சாலம்பரில் பாரத் ஆதிவாசி கட்சியும், தியோலி - யுனியாரா, ஜுன்ஜுனு, ராம்கர்,கின்வ்சார் தொகுதிகளில் பாஜகவும், தௌசாவில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது. சிக்கிமின் நாம்ச்சி - சிங்தாங், சோரெங் - சகுங் தொகுதிகளில் எஸ்கேஎம் கட்சி வென்றுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத், கைர், குந்தர்கி, மஜவான், புல்பூர், கேதாஹரி தொகுதிகளில் பாஜகவும், மீராபூரில் ஆர் எல்டி கட்சியும், சமாஜ்வாதி கட்சி கர்ஹால், சிஷாமாவ் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. உத்தரகாண்டின் கேதார்நாத்தில் பாஜக முன்னிலையில் உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மதரிஹாட், நைஹாடி, சிதாய் தொகுதியில் வென்றுள்ள திரிணமூல் காங்கிரஸ், தல்தாங்ரா, ஹரோவா, மேதினிபூரில் முன்னிலையில் உள்ளது.

மக்களவை இடைத்தேர்தலில் கேரளாவின் வயநாட்டில் காங்கிரஸும், மகாராஷ்டிராவின் நான்டெட்டில் பாஜகவும் முன்னிலையில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE