புதுடெல்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு ஒன்றில் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.
81 இடங்களைக் கொண்ட சட்டசபையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 42-47 இடங்களையும், ஜேஎம்எம் தலைமையிலான மகாகத்பந்தன் (இண்டியா கூட்டணி) 25-30 இடங்களையும் பெறக்கூடும் என்று மேட்ரைஸின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
பீப்பிள்ஸ் பல்ஸின் மற்றொரு கருத்துக்கணிப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி 44-53 இடங்களை வெல்லும் என்றும், இண்டியா அணிக்கு 25-37 இடங்கள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.
டைம்ஸ் நவ்-ஜேவிசியின் கருத்துக்கணிப்பில் என்டிஏவுக்கு 40-44 இடங்களும், இண்டியா கூட்டணிக்கு 30-40 இடங்களும் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
» மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
» நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் ஜேஎம்எம் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு 53 இடங்களும், என்டிஏவுக்கு 25 இடங்களும் கிடைத்தன.
ஜார்க்கண்டில் பாஜக 68 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 இடங்களிலும், ஜனதா தளம் (ஐக்கிய) 2 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 இடத்திலும் போட்டியிட்டன.
அவர்களுக்கு போட்டியாக முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 41 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) 4 இடங்களிலும் போட்டியிட்டன.