அங்கீகாரத்துக்கு ஏங்கும் 63% இந்திய ஊழியர்கள்: சர்வதேச நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

By KU BUREAU

புதுடெல்லி: அமெரிக்காவின் சர்வதேச வேலைவாய்ப்பு இணையதளமான ‘இன்'டீட்' இந்தியாவின் பணிச்சூழல் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். 30% உரிமையாளர்கள், 70% ஊழியர்கள் என்ற வகையில் கருத்துக் கணிப்பை நடத்தினோம்.

எங்களது கருத்துக் கணிப்பின் படி இந்திய ஊழியர்களில் 63% பேர் அங்கீகாரத்துக்காக ஏங்குகின்றனர். குறிப்பாக மூத்த அதிகாரிகள் தங்களது திற மையை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். சுமார் 48% இந்திய ஊழியர்கள் தங்கள் நிறுவனம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். மீதமுள்ளோர் நிறுவனத்தின் மீது ஏதோ ஒரு வகையில் அதிருப்தியை வெளிப்படுத்து கின்றனர். பணியிடத்தில் சுமார் 12% பெண் ஊழியர்கள் பாலின வேறுபாட்டை எதிர்கொள்வதாக புகார் தெரிவித்து உள்ளனர். ஆண் ஊழியர்களை பொறுத்த வரை இது 9% ஆக உள்ளது.

ஊழியர்களை போன்று நிறுவன உரிமையாளர்களிடமும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. சுமார் 47% உரிமையாளர்கள், தங்கள் ஊழியர்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். சுமார் 36% உரிமையாளர்கள், தங்கள் ஊழியர்கள் மீது சில விவகாரங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் சில கருத்து களை முன்வைக்கிறோம். பணி யிடங்களில் ஊழியர்களுக்கு உகந்த சூழலை உரிமையாளர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஊழியர்களை மதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்த ஊக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE