டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மியின் மகேஷ் கிஞ்சி வெற்றி: பாஜக தோல்வி

By KU BUREAU

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மகேஷ் கிஞ்சி, டெல்லி மாநகராட்சியின் புதிய மேயராக வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் டெல்லியின் முதல் தலித் மேயரான கிஞ்சி 133 வாக்குகளும், பாஜகவின் கிஷன் பால் 130 வாக்குகளும் பெற்றனர்.

காங்கிரஸ் உறுப்பினர்களின் வெளிநடப்பு உட்பட பல குழப்பங்கள் மற்றும் இடையூறுகளுக்குப் பிறகு இன்று மாலை நடைபெற்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மகேஷ் கிஞ்சி வெற்றிபெற்றார்.

டெல்லி மாநகராட்சியில் பாஜக 120 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தாலும், 10 வாக்குகளை கூடுதலாகப் பெற முடிந்தது. இதுகுறித்து பாஜக தரப்பில், ‘எட்டு ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், இரண்டு வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதும் ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. அரவிந்த் கேஜ்ரிவாலின்தார்மீகத் தோல்வியும் ஆகும். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனி "ஆம் ஆத்மி" ஒருங்கிணைப்பாளராக இருக்க தார்மீக உரிமை இல்லை" என்று தெரிவிக்கப்பட்டது.

டெல்லி மேயராக கிஞ்சியின் பதவிக்காலம் இன்னும் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே இருக்கும். ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது.

குழப்பங்களுக்கு மத்தியில், காங்கிரஸின் முகமது குஷ்னூத் மற்றும் அவரது மனைவி சபிலா பேகம் (முஸ்தபாபாத் வார்டு 243 கவுன்சிலர்) ஆம் ஆத்மி வேட்பாளருக்கு வாக்களிப்பதாகக் கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் வெளிநடப்பு செய்த நிலையில், அவர் மட்டும் வாக்களித்தார்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE