வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்வு: கிலோ ரூ.80 க்கு விற்பனை

By KU BUREAU

புதுடெல்லி: நாட்டின் பல நகரங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டெல்லி, மும்பை நகரத்தின் மொத்த விற்பனை சந்தைகளில் வெங்காயத்தின் விலையானது கிலோ ரூ. 40-60ல் இருந்து ரூ.70-80 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி சந்தையில் உள்ள விற்பனையாளர்கள் பேசுகையில், "வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. விலையேற்றம் காரணமாக விற்பனை குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்

வெங்காயத்தின் விலையேற்றம் குறித்து பேசிய வாடிக்கையாளர்கள், “ இப்போது வெங்காயம் மற்றும் பூண்டின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இது வீட்டு பட்ஜெட்டையும் பாதித்துள்ளது. அன்றாடம் உண்ணும் காய்கறிகளின் விலையையாவது குறைக்க வேண்டும் என்று நான் அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE