ஹைதராபாத்: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சியின் உள்துறை அமைச்சர் அனிதாவை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் பணியில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில், உள்துறை பொறுப்பையும் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அவரை எச்சரித்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அம்மாநில உள்துறை அமைச்சரை துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அனிதாவிடமும் சொல்கிறேன். நீங்கள் தான் உள்துறை அமைச்சர். நான் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள், இல்லாவிட்டால் உள்துறையையும் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
யோகி ஆதித்யநாத் போல நீங்கள் இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள் ஓட்டு கேட்க மட்டும் இங்கு வரவில்லை, உங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன, அனைவரும் சிந்திக்க வேண்டும். உள்துறையை நான் கேட்கவோ எடுக்கவோ முடியாது. நான் செய்தால், இந்த நபர்களுக்கு நடக்கும் விஷயங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாம் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மாற மாட்டார்கள். எனவே நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்" என்று அவர் கூறினார்
» பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தவில்லை: டெல்லி போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
» காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்: பாதிக்கப்பட்ட பயிர்களுடன் முறையிட்ட விருதுநகர் விவசாயிகள்