குஜராத்தின் கச் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

By KU BUREAU

கச்: குஜராத்தின் கச் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுடன், பிரதமர் மோடி நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாடினார்.

பிரதமர் மோடி குஜராத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டார். நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு அவர் மலரஞ்சலி செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளிப் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குஜராத்தின் கச் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, இந்தியா -பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள சர் கிரீக் பகுதிக்கு சென்றார். அங்கு லக்கி நலா என்ற இடத்தில் எல்லைப் பாதுகாப்பு படை, தரைப்படை, கடற்படை, மற்றும் விமானப்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இனிப்பு ஊட்டினார். அப்போது ராணுவ வீரர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷம் எழுப்பினர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE