கடந்த சில மாதங்களாகவே வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில், மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இன்று நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளது வணிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில் இன்று காலை வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.61.50 உயர்ந்துள்ளது. புதிய விலையின்படி, புதுடெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.1,802 -க்கும், மும்பையில் ரூ.1,754.50-க்கும், சென்னையில் ரூ.1,964.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.1,911.50-க்கும் விற்கப்படுகிறது.
வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
» இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!
» 50 சதவீத தள்ளுபடி... இன்று அதிகாலை ஜவுளிக்கடையில் குவிந்த பொதுமக்கள்!