வயநாடு நிலச்சரிவு இழப்பீட்டுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

கொச்சி: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை என செய்திகள் வந்துள்ளதாக கூறிய கேரள உயர்நீதிமன்றம், கருவூலம் அல்லது வங்கி கணக்குகள் மூலம் நிதியுதவி வழங்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 30-ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு உயர்நீதிமன்றம் தானாக தொடங்கிய வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் சியாம் குமார் வி.எம் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவு பிறப்பித்தது. விசாரணையின் போது, வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக அறிவிப்பது குறித்து உயர் அதிகாரம் கொண்ட குழு ஆய்வு செய்து வருவதாக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 வழங்கும் திட்டம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அனைத்தையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கை நவம்பர் 15-ம் தேதி ஒத்திவைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE