ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு: ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை

By KU BUREAU

ஜம்மு காஷ்மீர்: அக்னூர் செக்டாரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். தற்போது அப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

அக்னூரின் படால் பகுதியில் இன்று காலை 7 மணியளவில், மூன்று பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் மீது பல சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வாரத்தில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 24 அன்று, பாரமுல்லாவில் உள்ள குல்மார்க் அருகே ராணுவ வாகனத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், இரண்டு வீரர்கள் மற்றும் இரண்டு போர்ட்டர்களைக் கொன்றனர். அக்டோபர் 20 அன்று, கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்க்கில் ஒரு கட்டுமான தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு மருத்துவர் மற்றும் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE